காங்கோ நாட்டில் ரயில் கவிழ்ந்து 100 பேர் பலி
காங்கோ:ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயணிகள் ரயில் கவிழ்ந்து 100க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.
வெஸ்ட் கசாய் என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென்று கவிழ்ந்தது. ஏராளமான பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த ரயில் விபத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
200க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கோ நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. அமைதிப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த அமைதிப் படையினர் தான் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் எஸன் கூறுகையில்,
ரயில் வேகமாக செல்லும்போது ஒரு வளைவில் வேகத்தை குறைக்க டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காததால் இந்த மோசமான விபத்து நிகழந்துள்ளது.
ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழ்ந்துள்ளன. பயணிகள் பெட்டிகளுக்கு அடியில் சிக்கியிருப்பார்கள் எனத் தெரிகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றார்.












Click it and Unblock the Notifications