தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும்கர்நாடகம்-தடுக்காத கருணாநிதி: ஜெ. தாக்கு
சென்னை:தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசுக்கு தொலைநோக்கு சிந்தனையே கிடையாது. அதனால் தான் தமிழகம் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது.
தற்போது கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே முகளூர் என்ற இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டும் முதற்கட்ட பணியாக கடந்த மாதம் 31ம் தேதி கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் முகளூரில் ஆய்வு செய்து அவ்விடத்தில் அடையாள குறியீடுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
இத் திட்டத்துக்காக முதற் கட்டமாக கர்நாடக அரசு ரூ.25 கோடியை ஒதுக்கியுள்ளது. கர்நாடக பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்த ஆய்வுப் பணியை முகளூர் பகுதி பொது மக்கள் பார்த்துள்ளனர்.
கர்நாடகத்தின் நந்தி ஹில்ஸ் மலையில் உற்பத்தியாகி சிக்கபலாபுரம் வழியாக தமிழ்நாட்டின் எல்லையைத் தொட்டு தென் பெண்ணை ஆற்றின் வழியாக ஓடும் இந்த ஆறு கோடியாளம் தடுப்பு அணை வழியாக ஓசூர் கெலவரபள்ளி அணையை வந்தடைகிறது.
இந்த அணையின் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவைகள் நிறைவடைவதோடு, விவசாயத்திற்கு பெரிதும் பயன்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு பயன்பட்டு வந்த இந்த அணைக்கு நீர் வரும் பாதையில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதையெல்லாம் கவனிக்காமல், தேவையில்லாத அறிக்கைகளை விடுவதிலும், தரமற்ற கேள்வி-பதில் எழுவதிலும் நேரத்தை செலவிடுகிறார். இதுக்கே அவருக்கு நேரம் போதவில்லை.
திமுக அரசின் தெளிவான தொலை நோக்கு பார்வை இல்லாத காரணத்தினால்தான், காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருவது ஆகிய பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார் கருணாநிதி.
இதில், இந்த பட்டியலில் தென் பெண்ணை ஆற்றில் அணை கட்டுவதும் சேர்ந்துள்ளது.
எப்படிப்பட்டவரும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது. வானம் பொய்த்தால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும் என்ற வள்ளுவரின் புகழ்மிக்க பொருளுக்கு ஏற்ப நீரின் அவசியம் வாழ்க்கையில் முக்கியமானதாக உள்ளது.
நான் காவிரி தண்ணீரை குடித்து வளர்ந்தேன் என்று சொல்லும் கருணாநிதி அந்த தண்ணீரின் அருமையை உணராத காரணத்தினால் தான் தண்ணீரின் வளத்தை தொலைத்துவிட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications