நடுரோட்டில் ஹெலிகாப்டரை இறக்கிய லாலு!
பாட்னா:மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பீகாரில் வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்றபோது அவரது ஹெலிகாப்டர் நடு ரோட்டில் இறக்கப்பட்டது. இதுகுறித்து பீகார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ள சேதத்தைப் பார்வையிடுவதற்காக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவும், பீகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் சிங் பிரசாத்தும் ஹெலிகாப்டரில் வந்தனர்.
பல்வேறு பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிட்டார் லாலு. அதை பிரதமரிடம் காட்ட தனது வீடியோ கேமராவிலும் படம் எடுத்தார்.
![]() |
முசாபர்பூர் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்தபோது கீழே பெரும் திரளான மக்கள் கூடியிருப்பதைப் பார்த்தார் லாலு. இதையடுத்து ஹெலிகாப்டரை தரையிறக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சாலையில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. சாலையில் இறங்கத் தொடங்கியது.
நடு ரோட்டில் ஹெலிகாப்டர் இறங்கியதைப் பார்த்த வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ந்துபோய் வாகனங்களை நிறுத்தினர்.
பின்னர் ஹெலிகாப்டரிலிருந்து லாலு கீழே இறங்கி வந்து மக்களிடம் குறை கேட்டார். நடு ரோட்டில் ஹெலிகாப்டரை இறக்குவது ரிஸ்க்கான வேலை. ஆனால் லாலுவின் வற்புறுத்தல் காரணமாகவே விமானி, ஹெலிகாப்டரை நடு ரோட்டில் இறக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பீகாரைச் சேர்ந்த இன்னொரு மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த வக்கீல் ஓஜா என்பவர் முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.
அதில், நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது லாலு பிரசாத்தின் ஹெலிகாப்டர் திடீரென ரோட்டில் இறங்கியது. அப்போது நான் திடீரென பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினேன். அப்போது வண்டி விழுந்து எனக்குக் காயம் ஏற்பட்டு விட்டது.
எந்த முன் அனுமதியும் இல்லாமல், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு ஹெலிகாப்டரை நடு ரோட்டில் இறக்கியதற்காக லாலு பிரசாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார் ஓஜா.
இந்தப் புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications