கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரும்-பிரதமர்
பெங்களூர்:கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு ஸ்திரமாக இல்லை. இதனால் அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இன்று காலை பெங்களூர் வந்த பிரதமர் தொண்டர்களிடையே உரையாற்றுகையில்,
அக்டோபரில் ஆட்சிப் பொறுப்பை பாஜகவிடம் ஜனதா தளம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், அக்டோபரில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கர்நாடகத்தில் அரசியல் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.
பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மதக் கலவரங்கள் தான் மிஞ்சின. மக்களை மதத்தின் பெயரால் துண்டாடினார்கள்.
ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின் மதசார்பின்மை மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் வென்றுள்ளோம்.
மதவாத சக்திகளை ஒதுக்கி வைக்க வேண்டியது மிக அவசியம். மதவாதத்தின் அபாயங்களை கர்நாடக மக்களும் உணர்ந்து கொள்வது நல்லது.
மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கூட்டணி அனைத்து விஷயங்களிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போது தான் முதன் முறையாக 9 சதவீத வளர்ச்சியை நாடு கண்டு வருகிறது என்றார் சிங்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications