சுய நலத்திற்காக கட்சியா?: சரத்குமார்
திருநெல்வேலி:எனது சுய நலத்திற்காக கட்சி தொடங்கவில்லை. தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர பாடுபடுவோம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
![]() |
நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் பிறந்த தினவிழா, நாடார் சங்க 19-வது ஆண்டு விழா, காமராஜர் அரங்கம் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு சரத்குமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ஆகஸ்ட் 29-ந் தேதிக்கு பிறகு புதிய கட்சியை தொடங்க உள்ளோம். அப்போது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிப்போம்.
![]() |
நல்ல எண்ணத்தோடு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருகிணைத்து சமத்துவ கட்சியாக எங்கள் கட்சி செயல்படும். அதற்காக நாம் அனைவரும் ஒருகிணைந்து பாடுபட வேண்டும்.
வருங்கால சமுதாயமும் இளைஞர்களும் எழுச்சியுடன் செயல்பட தொடர்ந்து பாடுபடுவேன். உங்களை மாதத்தோறும் சந்திக்க உள்ளேன். 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடந்தது.
![]() |
காமராஜர் எப்படி ஆட்சி செய்தார். அவரது திட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். காமராஜர் தனது ஆட்சி காலத்தில் கல்வி வளர்ச்சிக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டார். அத்தகைய சிறப்பான ஒரு ஆட்சியை அமைக்க நாம் பாடுபட வேண்டும்.
சினிமாக்களில் நடித்து உங்களது ஆதரவால் உயர்ந்திருக்கிறேன். எந்த சுய நலத்திற்காகவும் கட்சி தொடங்கவில்லை. தன்னலமற்ற, சுயநலமற்ற வகையில் மக்களுக்கு செயல்படவே கட்சி தொடங்குகிறேன் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications