பூட்டிய வீட்டில் கொள்ளை-பெண் சாமியாரிடம் விசாரணை
திருப்பூர்:திருப்பூரில் பூட்டிய வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பெண் சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் கருமானம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சுப்புராம் (23)- சுப்புலெட்சுமி(19) தம்பதி. சுப்புராம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுடைய வீட்டிற்கு அருகில் குடியிருப்பவர் சுதா (35). இவர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குறி சொல்வாராம்.
ஒரு மாதத்திற்கு முன்பு சுப்புலெட்சுமியிடம் சுதா, உனக்கு நேரம் சரியில்லை, நீ இந்த வீட்டில் இருக்காதே. வீட்டில் இருந்து எதையும் எடுக்காமல் 1 மாதத்திற்கு எங்கேயாவது வேறிடத்தில் இருப்பது தான் நல்லது என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய சுப்புலட்சுமியும் சுப்புராமும், வீட்டை பூட்டி உறவினரிடம் சாவியை கொடுத்துவிட்டு சுப்புலட்சுமியின் தாய் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந் நிலையில் இரு நாட்களுக்கு முன், பெண் சாமியார் சொன்னபடி 1 மாதம் முடிந்து விட்டதால், உறவினர் வீட்டுக்கு போன் செய்து வீட்டில் இருக்கும் நகையை உங்கள் வீட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
உறவினரரும் சுப்புலெட்சுமி சொல்லியபடி வீட்டுக்குப் போய் பார்த்துள்ளார். ஆனால், அங்கு நகைகள் இல்லை. இது குறித்து சுப்புலட்சுமி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.
பெண் சாமியார் சுதா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications