ரயில்களில் இனி ஸ்டார் சாப்பாடு!
டெல்லி:நட்சத்திர ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவு வகைகளை ரயில்களில் அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் அரசு பேருந்துகளை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது ரயில்களுக்கு பெரும் மவுசு ஏற்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பயணிகளுக்கான கட்டணங்களைக் குறைத்தும், பல்வேறு சலுகைகள், வசதிகளைக் கொடுத்தும் ரயில் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது ரயில்வே.
இந்த நிலையில், பயணிகளுக்கான உணவில் தற்போது தீவிர கவனம் செலுத்த ரயில்வே தீர்மானித்துள்ளது. தற்போது முதல் வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோர்க்கு ரயில்வே வழங்கும் உணவு குறித்து நிறைய புகார்கள். தரமற்றவையாக அவை உள்ளதாக பயணிகள் குறை கூறி வருகின்றனர்.
இதனால் முதல்வகுப்பு மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி பயணிகளின் பாராட்டைப் பெற ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தற்போது விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் கொடுக்கப்படும் உணவு வகைகளை கொடுக்கின்றனர். அதேபோல, முதல் வகுப்பு, ஏசி வசதி, ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணம் செய்வோருக்கு இதே தரத்திலான உணவை தர ரயில்வே முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக ராஜதானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இது அமல்படுத்தப்படும். ரயில்வே துறை நடத்தும் விடுதிகளின் தரத்தை உயர்த்தி, அவை அனைத்தும் 5 ஸ்டார் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
பயணிகளுக்கு கார் வசதி, ஹோட்டல் வசதிகளை ரயில்வே நிர்வாகம் கால் சென்டர்கள் மூலம் ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தினையும் கொண்டு வரவுள்ளது.
முக்கிய தடத்தில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரித்து நிறுத்தத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி-சென்னை, டெல்லி-கொல்கத்தா, டெல்லி-மும்பை ரயில்களின் வேகம் முதற்கட்டமாக அதிகரிக்கப்படவிருப்பதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications