நடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்
சென்னைகொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விமானத்திற்குள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தாவிலிருந்து தனியார் நிறுவன விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். ஆனால் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கழிப்பறை ஏன் மூடப்பட்டுள்ளது என்று பயணிகள் கேட்டதற்கு விமான ஊழியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அத்தனை பயணிகளும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விமானம் சென்னைக்கு வந்து சேர்ந்ததும், விமான ஊழியர்கள், ஒரு பயணியை ரகளை செய்ததாக கூறி விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
இதைப் பார்த்ததும் மற்ற பயணிகள் திரண்டு வந்து மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர். கழிப்பறைக் கதவு ஏன் மூடப்பட்டிருந்தது என்று கேட்பது குற்றமா, அதற்காக தண்டனையா என்று ஆவேசமாக கேட்டபடி மேலாளரை முற்றுகையிட்டு கோபத்துடன் பேசினர்.
பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அத்தனை பயணிகளும் கையெழுத்திட்டுப் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், நடந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் வருத்தம் கேட்டனர். இதுபோல இனி நடக்காது என்று உறுதியளித்தனர். இதையடுத்து பயணிகள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications