கரூரில் தலையில் தேங்காய் உடைக்கும் விழா:சிறுவர்கள் தலைக்கு தடா!
Subscribe to Oneindia Tamil
கரூர்:கருர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் தலையில் தேங்காய் உடைக்கும் விழா இன்று நடைபெறுகிறது. சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
![]() |
கருர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இது கிருஷ்ணதேவராயர் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு கருர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் பெங்களூர், மைசூர், ஹைதராபாத் போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
![]() |
ஆண்டுதோறும் ஆடி 1ம் தேதி முதல் விரதம் இருப்பார்கள் பக்தர்கள். 19ம் தேதியான இன்று தங்களது தலையை மொட்டையடித்து நேர்த்திக் கடனை முடித்து தலையில் தேங்காய் உடைத்து விரத்தை முடித்துக் கொள்வர். இதில் பலருக்கும் ரத்தக் காயம் ஏற்படுவதுண்டு.
![]() |
இந்த ஆண்டும் தலையில் தேங்காய் உடைக்கும் விழாவுக்காக பக்தர்கள் மேட்டுமகாதானபுரத்தில் குவிந்துள்ளனர். விழாவில் 5 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்களுக்கு கோவில் பூசாரி தலையில் தேங்காய் உடைப்பார்.
ஆனால் சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் மூளை பாதிக்கும் என சிலர் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து குளித்தலை ஆர்.டி.ஓ. பிச்சையம்மாள் கோவில் நிர்வாகத்தினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது, சிறுவர்கள் தலையில் தேங்காய் உடைக்க மாட்டோம் என கோவில் நிர்வாகிகள் உறுதியளித்தனர். இருந்தும் சிறுவர் தலையில் தேங்காய் உடைப்பக் கண்காணிக்க போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்















Click it and Unblock the Notifications