அரசு மருத்துவமனையில் மருந்தில்லை:பாம்பு கடித்தவர் பரிதாப சாவு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே பாம்பு கடித்தவருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருந்து இல்லாததால் அவர் பரிதாபமாக இறந்தார்.

பேராவூரணி அருகே உள்ள ஏனாதிபதிகரம்பை கிராமத்தை சார்ந்தவர் சண்முகம். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை.

தனது தோட்டத்தில் வயல் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த நல்ல பாம்பு ஒன்று அவரை தீண்டியது.

இதனால் அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் உடனே அவரை மருத்துவ மணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பேராவூரணி மருத்துவமணையில் விஷ முறிவு மருந்து இல்லை என டாக்டர்கள் கூறி விட்டனர்.

இதையடுத்து அவரை பட்டுக்கோட்டைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலே இறந்து போனார். அரசு மருத்துவமனையில் பாம்புக் கடிக்கான மருந்து ஸ்டாக் இல்லாமல் போனதால் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோனது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+