திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள்விரும்பவில்லை - கூறுகிறார் இல.கணேசன்
சென்னை: திமுக, அதிமுக ஆட்சிகளை மக்கள் விரும்பவில்லை. வருங்காலத்தில் தேமுதிகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுக அல்லாத கட்சிகளின் ஆட்சியை விரும்புகிறார்கள். அதனால் தான் நாங்கள் கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டோம்.
![]() |
சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து அப்போது எடுத்த முடிவை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இதனால்தான் நாங்கள் தனித்துப் போட்டியிட நேர்ந்தது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு, பாஜகதான் மாற்றுக் கட்சி என்பதை நிரூபிக்க தவறிவிட்டோம். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். திமுக, அதிமுகவுக்கு மாற்றான கட்சி தேமுதிகதான் என்பதை அவர் நிரூபித்து விட்டார்.
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே தான் கடும் போட்டி ஏற்படும். 3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையை ஜெயலலிதா ஏற்படுத்தி விட்டார்.
எனவே மத்தியில் பாஜக அல்லது காங்கிரஸ் தான் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும்.
எனவே, அகில இந்திய அளவில் பலம் படைத்த பாஜகவும், தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்கட்சியாக வளர்ந்துள்ள தேமுதிகவும் இணைந்து செயல்பட வேண்டும்.
பாஜக, தேமுதிக இணைப்பு தமிழகத்தில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டால்தான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்றாக ஒரு பலமான அணியாக உருவெடுக்கும்.
தேமுதிகவின் வளர்ச்சி பாஜகவை விட, ஆளும் திமுக அரசை எதிர்க்கின்ற மற்ற கட்சிகளைத்தான் வெகுவாக பாதித்துள்ளது என்றார் கணேசன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications