டிராபிக் நெரிசலைக் கட்டுப்படுத்தகார்களுக்கு குண்டக்க மண்டக்க வரி!
டெல்லி:கார்களால் ஏற்படும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், கார்களின் பெருக்கத்தைக் குறைக்கவும், பல மடங்குக்கு வரிகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
இந்தியாவில் ஒரு பேருந்துக்கு 5000 கார்கள் என்ற விகிதத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இது மேலும் பல மடங்கு அதிகரிக்கக் கூடும் எனவும் அந்த புள்ளி விவரம் தெரிகிறது.
ஆனால் கார்கள்தான் இந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதே தவிர, அந்தக் கார்கள் சொகுசாக ஓடுவதற்கேற்ற நல்ல சாலைகளோ, அகலமான சாலைகளோ நமது நாட்டில் கிடையாது. குண்டும் குழியுமான சாலைகளில்தான் குதித்து குதித்து ஓடிக் கொண்டிருக்கிறது நமது கார் கூட்டம்.
![]() |
மேலும், நமது நாட்டில் சாலை விதிகளை மதிப்பவர்களை கார் விட்டு எண்ணி விடலாம். முக்கால்வாசி பேர் சுத்தமாக டிராபிக் ரூல்ஸை மதிப்பதே கிடையாது.
இடது பக்க இண்டிகேட்டரைப் போட்டு விட்டு ஸ்டிரெய்ட்டாக போகிறவர்கள் பலர். மேலும் இண்டிகேட்டரே போடாமல் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் இஷ்டத்திற்குத் திரும்பி அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுப்பவர்களும் அதிகம். இதனால் தினமும் ஏற்படும் வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசல்களும் பொதுமக்களுக்கு அதிக சிரமத்தை விளைவிக்கிறது.
இதுகுறித்து நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிதி அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், நாட்டில் தனிநபர்கள் கார் வாங்குவது அதிகரித்துள்ளது. இதற்கு நாட்டில் பேருந்துகள் மற்றும் ரயில் வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதே முக்கிய காரணம்.
அதனால் தான் இவர்கள் தொல்லை இல்லாத பயணத்திற்கு கார்களில் செல்கிறார்கள். இதனால் அவர்களின் நேரம் வீணாவதோடு, சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு சேவை அளித்துவரும் பேருந்துகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்), கலால் வரி (எக்சைஸ் வரி) ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை தனிநபர்கள் சொந்தமாக வைத்துள்ள வாகனங்களுக்கு அதிக வரியை விதிப்பதன் மூலம் ஈடுகட்ட வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் கார்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுதல், போக்குவரத்து நெரிசல், விபத்து, நேரம் வீணாவது அனைத்தும் தவிர்க்கப்படலாம்.
அது மட்டுமல்லாது பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகளின் எண்ணிக்கை, வசதி அதிகரிக்கப்பட வேண்டும் என நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது.
இதன்படி சிறிய கார்களுக்கு (4 மீட்டர் நீளம் கொண்ட கார்கள்) இந்த வரி அளிக்கப்பட மாட்டாது. பெரிய கார்களுக்குத்தான் இந்த வரி விதிப்பு.
நாட்டின் மொத்த கார் விற்பனையில் 70 சதவீதம் சிறிய கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாடா மற்றும் பஜாஜ் - ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் வரும் 2008ல் ரூ.1 லட்சம் விலையுள்ள கார்களை அறிமுகம் செய்யவுள்ளது மத்திய அரசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications