திருமா. போராட்டம் எதிரொலி - கோவிலுக்குப் பூட்டு!

Subscribe to Oneindia Tamil

சேலம்:தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அறிவித்ததால், சேலம் மாவட்டம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி விட்டனர்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளதாகும்.

ஆனால் கோவிலுக்குள் தலித் சமூகத்தினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக சமீப காலமாக அவர்களுக்கும் வன்னியர் சமூகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வந்தது.

Tirumavalavan

இந்த நிலையில், தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் திருமாவளவன் அரசுக்க்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை வன்னியர் சமூகத்தினர் அனுமதிக்க முடியாது என்று நிராகரித்தனர்.

இதைத் தொடர்ந்து தலித் மக்களுடன் கோவிலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தப் போவதாக (நாளை) திருமாவளவன் அறிவித்தார். இதனால் கந்தம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து அதிகாரிகள் கோவிலுக்குப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

திருமா. போராட்டம் ஒத்திவைப்பு:

இதற்கிடையே தான் அறிவித்த போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சேலம் கவுந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் சென்று வழிபட முடியாத நிலை நிலவுகிறது.

கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வழிபாட்டுரிமை அறப்போர் எனும் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த திங்கள்கிழமை திட்டமிடப்பட்டிருந்தது.

அந்தப் பகுதியில், நடந்த பதற்றத்தையடுத்து 3ம் தேதி கலெக்டர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூகத் தீர்வு ஏற்படும் வரையில், கோவிலைப் பூட்டி பூட்டு முத்திரை வைக்க முடிவெடுத்து கோவில் மூடப்பட்டுள்ளது.

எனவே கோவில் நுழைவுப் போராட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த கட்ட சூழல்களைப் பொறுத்து முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+