அங்கவை, சங்கவை, பொங்கவை: பாப்பையா,ரஜினி, சுஜாதா, ஷங்கருக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:பாரி வள்ளலின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரை, சிவாஜி படத்தில் கேலி செய்வது போல வசனம் இடம் பெற்றதற்கும், அவர்களை கருப்பான பெண்களாக சித்தரித்து கிண்டலடித்ததற்கும் பட்டிமன்ற நாயகர் சாலமன் பாப்பையாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினி நடித்த சிவாஜி படத்தில் சாமலன் பாப்பையாவும் அவரது பட்டிமன்றங்களில் தவறாமல் இடம் பெறும் ராஜாவையும் காமெடியாக நடிக்க வைத்தார் ஷங்கர்.

அதில், ராஜாவின் வீட்டுக்கு ரஜினி, விவேக் உள்ளிட்டோர் பழக வருவார்கள். ஆனால் அவர்களை விடாமல் கதவைச் சாத்தி விடுவார் ராஜா. இதனால் வீட்டுக்கு வெளியே நிற்கும் ரஜினியிடம் பக்கத்து வீட்டுக்காரரான சாலமன் பாப்பையா வருவார்.

Angavai and Sangavai in Sivaji

அவங்க இல்லாட்டி என்னா, எங்க வீட்டுக்கு வாங்க, எனக்கு ரெண்டு பெண்ணுங்க என்று கூறி தனது பெண்களை அறிமுகப்படுத்துவார். கட்டக் கருப்பாக காணப்படும் அந்தப் பெண்களைக் காட்டி இது அங்கவை, இது சங்கவை என்பார். அப்போது விவேக் குறுக்கிட்டு ரொம்ப பொங்க வச்சுட்டீங்க போலிருக்கே என்று கிண்டலடிப்பார்.

இந்த வசனத்திற்கும், கேரக்டர் அமைப்புக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கவையும், சங்கவையும் முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரியின் மகள்கள் ஆவர்.

பாரியின் மகள்களை இழிவுபடுத்துவது போல காட்சி வைப்பதா என்று பொங்கியுள்ள பல்வேறு தமிழ் அமைப்பினர் பேராசிரியரான சாலமன் பாப்பையா இதுபோன்ற காட்சிகளில் நடிக்கலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந் நிலையில் நேற்று விழுப்புரத்தில் கம்பன் விழா நடந்தது. அதில் சாலமன் பாப்பையா கலந்து கொண்டார். அப்போது தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டப் போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

original Angavi and Sangavai

இதையடுத்து சாலமன் பாப்பையாவை போலீஸார் பாதுகாப்பாக அரங்குக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மண்ணின் மைந்தர்கள் சங்கம், தமிழர் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாப்பையாவைக் கண்டித்து பிட் நோட்டீஸ் விநியோகித்தனர்.

அதில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், வசனம் எழுதிய சுஜாதா ஆகியோரைர கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து போலீஸார் பிட் நோட்டீஸ் விநியோகித்த ஏழுமலை, இளங்கோ, ஆனந்தன், ஜோதி, நரசிம்மன், வெற்றி அழகன், பாபு, அன்பில் எழுமலை, எழில் ஆகியோரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+