கோவை-இன்று தண்டனை அறிவிப்பு!தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் நிலை
கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 153 பேருக்கும் இன்று முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதையொட்டி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கடந்த 1ம் தேதி கோவை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந் நிலையில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
இதையொட்டி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோவில்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், வணிக பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் சில அமைப்புகளையும், ஜாமீனில் உள்ள தீவிரவாதிகளையும் உளவு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இம்மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம், பொட்டல்புதூர், கடையநல்லூர், தென்காசி, வடகரை, செங்கோட்டை ஆகிய ஊர்களில் சாதாரண உடைகளில் பல பகுதிகளில் உள்ள போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல ஊர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தென்காசி-புளியரை சோதனை சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையும் நடைபெறுகிறது. பல ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் குவியும் குற்றாலத்திலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications