செப். 12ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு உணவு, மருந்துஅனுப்புவோம் - பழ. நெடுமாறன் அறிவிப்பு
விழுப்புரம்:யாழ்ப்பாணத்தில் பசி, பட்டினியால் வாடி வரும் தமிழர்களைக் காக்க படகுகள் மூலம் உணவு, மருந்துப் பொருட்களை செப்டம்பர் 12ம் தேதி அனுப்பப் போவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையால் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள் இல்லாமல் பெரும் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து யாழ்ப்பாணத்தில் வாடி வரும் தமிழர்களுக்கு உதவ தமிழகத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் பழ. நெடுமாறன் இறங்கினார்.
தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்த இந்த இயக்கத்தின் மூலம் ரூ. 1 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் சேகரிக்கப்பட்டன.
இவற்றை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப கடந்த ஜனவரி 28ம் தேதி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை அணுகினர். செஞ்சிலுவைச் சங்கமும் இவற்றை யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்ல அனுமதி கோரி மத்திய அரசை அணுகியது.
ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்காமல் பெருத்த அமைதி காத்து வருகிறது.
இதுதொடர்பாக மதிமுக பொச் ெசயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் முயற்சித்தும் கூட மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக அமைதியாக இருந்து வருகிறது.
வைகோ, ராமதாஸ் ஆகிேயார் பிரமதரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து ேகாரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்தப் பயனும் இல்லை.
இதையடுத்து மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், மத்திய அரசைக் கண்டித்து தமிழீழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் கண்டன மாநாடு நடந்தது.
இம்மாநாட்டுக்குப் பின்னர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 2 கப்பல்கள் நிறைய பொருட்களை இலங்கைக்கு அனுப்பினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது விமானங்கள் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் தற்போபாதைய மத்திய அரசு இந்த விஷயத்தில் அமைதி காத்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த பிரச்சினை குறித்து மக்களிடம் எடுத்துக் கூற செப்டம்பர் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை பிரசார பயணம் மேற்கொள்ளவுள்ளோம். திருச்சியிலிருந்த நாகைக்கும், மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும்.
மேலும், செப்டம்பர் 12ம் தேதி படகுகள் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் எடுத்துச் செல்லப் போகிறோம். எங்களை தடுத்து கைது செய்தால் சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம் என்றார் நெடுமாறன்.
ஐ.நா. பிரதிநிதி கொழும்பு வருகை:
இதற்கிடையே, ஐ.நா சபையின் நெருக்கடி கால நிவாரண உதவி ஒருங்கிணைப்பாளர் ஜான் ஹோம்ஸ் இன்று கொழும்பு விரைகிறார்.
இலங்கை படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டையில் அப்பாவித் தமிழர்களும், சிங்களர்களும் சிக்கிப் பலியாவது குறித்து அரசுடன் பேச்சு நடத்த அவர் வருகிறார்.
நான்கு நாள் பயணமாக வரும் ஹோம்ஸ், தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் ெசல்லவுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை அந்தப் பயணம் குறித்து இலங்கை அரசு உறுதிப்படுத்தவில்லை.
தமிழர்கள் அதிக அளவில் பலியாவது குறித்து இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி அமைதிக்கான வழிமுறைகள் குறித்தும் ஹோம்ஸ், இலங்கை அரசுத் தரப்புடன் ஆலோசிக்கவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications