தாவூத் இப்ராகிம் கைது?-அமெரிக்க நெருக்கடியால்முஷாரப் அதிரடி: ஷகீல், மேமனும் பிடிபட்டனர்
திண்டுக்கல்:திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமியும், ராஜசேகரனும் விடுதலை செய்யப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானின் உளவுப் பிரிவு கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் நெருக்கடியைத் தொடர்ந்து தாவூதை அதிபர் முஷாரப் கைது செய்ய உத்தரவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து துபாய்க்குத் தப்பிய தாவூத் அங்கிருந்து பாகிஸ்தான் உளவுப் பிரிவின் உதவியோடு கராச்சியில் குடியேறினார்.
![]() |
அங்கு உயர் ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பிலேயே தாவூதும் அதிகபட்ச ராணுவ பாதுகாப்போடு தங்கியிருந்தார்.
ஆனால், தாவூத் பாகிஸ்தானில் இல்லை என அந் நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.
இந் நிலையில் தாவூதை அமெரிக்காவும் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்தது. அதிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி உருவானது.
அல்-கொய்தாவுக்கு தாவூத் நிதி உதவி செய்து வருவதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா அவரை கைது செய்து தன்னிடம் ஒப்படைக்குமாறு முஷாரபுக்கு நெருக்கடி தர ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் கராச்சியில் இருந்து தாவூத் இப்ராகிமை வெளியேற்றிய பாகிஸ்தான் அரசு, அவரையும், சோட்டா சகீல் மற்றும் மும்பை குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் ஆகியோரை ஆப்கான் எல்லைப் பகுதியில் குடியேற்றியது.
ஆனாலும் அவர்களது இருப்பிடத்தை அறிந்த அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானை நெருக்கியதால், அவர்களை கைது செய்ய முஷாரப் உத்தரவிட்டார்.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு குவெட்டா நகரின் வெளியே ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்படவில்லை. அவர் பாகிஸ்தானிலேயே இல்லை என அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
முன்னதாக தாவூதை கராச்சியில் வைத்து அவரது எதிர் கோஷ்டியினர் தாக்கியதில் அவருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இதையும் பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
தாவூத் இங்கேயே இல்லாத நிலையில் எப்படி அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளனர் பாகிஸ்தான் அதிகாரிகள்.
ஆனால், இப்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவில் கட்டுப்பாட்டில் தான் தாவூதும் மற்ற இருவரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications