ஜப்பானில் பயங்கர பூகம்பம்- சுனாமி இல்லை
Subscribe to Oneindia Tamil
டோக்யோ:ஜப்பான் அருகே மிகவும் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் சுனாமி அலைகள் எழுவதற்கான வாய்ப்பில்லை என்று ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தெற்கு ஓகினாவா தீவில் இன்று காலை இந்திய நேரப்படி 5.20 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த பூகம்பத்தின் அளவு 6.4 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்த பூகம்பத்தால் உயிர்ச் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஓகினாவா தீவின் வட மேற்கில் கடலுக்கு அடியில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்தது.
பூகம்பம் ஏற்பட்ட தீவுப் பகுதியில் ஜப்பானின் மிகப் பெரும் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது. ஆனால் பூகம்பத்தால் இந்த நிறுவனத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications