போர் விமானங்கள் வாங்கியதில்ராஜபக்சே தம்பி பல கோடி ஊழல்
கொழும்பு:இலங்கை விமானப்படைக்கு போர் விமானங்கள் வாங்கியதில், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோதபயா ராஜபக்சே பெருமளவு ஊழல் புரிந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளராக இருப்பவர் ராஜபக்சேவின் தம்பி கோதபயா ராஜபக்சே. கடந்த ஆண்டு மிக் 27 ரக போர் விமானங்களை இலங்கை பாதுகாப்புத் துறை வாங்கியது.
அதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புகார் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக் 27 போர் விமானங்களை இந்தியா, கஜகஸ்தான் தவிர எந்த நாடும் பயன்படுத்துவது கிடையாது. இந்த விமானங்கள் காலாவதியாகி விட்டன. எனவே சர்வதேச சந்தையில் விற்கப்படாமல் இருந்தன.
கடந்த 2000ம் ஆண்டு முதல் இந்த விமானங்களை பிற நாடுகள் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தப்படாமல் இருந்த விமானங்களைத்தான் கூடுதல் விலை கொடுத்து தேவையில்லாமல் இலங்கை அரசு வாங்கியுள்ளது.
இதில் கோதபயா ராஜபக்சே பெருமளவு ஊழல் புரிந்துள்ளார். கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார்.
இதுத்தவிர தற்போது உபயோகித்து வரும் கே-பிர் ரக விமானங்களை நவீனப்படுத்தும்படி பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, உபயோகமே இல்லாத மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியுள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications