53 வாக்குகள் வித்தியாசம்: திமுக எம்எல்ஏதேர்வு செல்லும்- உயர்நீதிமன்றம்!
சென்னை:பொங்கலூர் தொகுதியில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.மணியின் தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் பொங்கலூர் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.மணி என்பவர் 53 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து இத்தொகுதியில் மணியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் பி.வி.தாமோதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ெதாடர்ந்தார்.
அந்த மனுவில், தபால் ஓட்டுக்களைத்தான் முதலில் பிரித்து எண்ண வேண்டும். அதன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பின்னர்தான் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும்.
ஆனால் இந்த தேர்தல் விதிமுறை பொங்கலூர் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை. விதிமுறையை மீறி முதலில் தபால் ஓட்டுக்களை எண்ணவில்லை.
இதனால் ஓட்டு எண்ணிக்கையின்போது குழப்பம் ஏற்பட்டது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அதை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்து விட்டனர்.
ஓட்டு எண்ணிக்கையின்ேபாது ஏற்பட்ட இந்த குழப்பத்தால் தபால் ஓட்டுக்களை எண்ணியபோதும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணியபோதும் எங்களது ஏஜென்டுகளால் கவனம் செலுத்த முடியவில்லை.
எனவே திமுக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி நாகப்பன், பொங்கலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றதுசெல்லும் என்று தீர்ப்பளித்து அதிமுக வேட்பாளரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
தனது குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை. சட்டப்பிரிவு மீறப்பட்டுள்ளது என்பதை தெளிவாக நிரூபிக்கவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications