எண்கெளன்டர் பயம்: ரெளடி மாலைக்கண் செல்வம் சரண்
சென்னை:எண்கெளண்டரில் காலி ஆகிவிடுவோம் என்று பயந்து வட சென்னையின் முக்கிய ரெளடியான செல்வம் என்ற மாலைக்கண் செல்வம் இன்று போலீசாரிடம் தானாகவே வந்து சரணடைந்தான்.
தமிழகம் முழுவதும் ரெளடிகளை அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் ஜாபர் சேட், ஜாங்கிங், நாஞ்சில் குமரன், ரவி உள்ளிட்டோரின் மேற்பார்வையில் ரெளடிகள் பட்டியலிடப்பட்டு குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பல ரெளடிகள் ஊரை விட்டும், தமிழகத்தை விட்டும் ஓடி வருகின்றனர்.
சென்னையில் டாப் 15 ரெளடிகளின் பட்டியலை தயாரித்துள்ள கமிஷ்னர் நாஞ்சில் குமரன், அவர்கள் மீது கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
குறிப்பாக செல்வத்தின் தொல்லை ரொம்பவே அதிகமாக இருப்பதால் அவனை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து செல்வத்தின் கதையை முடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டது.
மாதவரத்தைச் சேர்ந்த 45 வயதான செல்வத்துக்கு ரெளடித்தனம் தான் தொழிலே. 4 கொலைகள், வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை, அடிதடி, மிரட்டல் என பொழுதைப் போக்கிக் கொண்டும் அப்படியே சில அரை பாடி லாரிகளை வாங்கி வாடைக்கு விட்டுக் கொண்டும் திரிந்தவன்.
சென்னை துறைமுகத்தில் இவன் காண்ட்ராக்டர் வேறு. எந்த வழக்கிலும் சாட்சி சொல்ல ஆள் இல்லாததால் தப்பி வந்தான்.
போலீஸ் தன்னை குறி வைப்பதை அறிந்தவுடன் தலைமறைவு வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தான்.
இந் நிலையில் இன்று பகலில் சென்னை கமிஷ்னர் அலுவலகத்துக்கு தனது வழக்கறிஞர்களுடன் நடுங்கியபடி வந்தான்.
வட சென்னையை நடுங்க வைத்த ரெளடியான அவன், நேரடியாக நாஞ்சில் குமரனிடம் போய், அய்யா நான் சரணடையுறேன்.. என்னைய ஒன்னும் பண்ணிறாதீங்க என்று கதறினான்.
நான் ஒரு தப்பும் பண்ணவில்லை, எல்லாமே பொய் கேஸ் போட்டுள்ளார்கள் என்றான்.
இதையடுத்து அவனது குற்றங்களை பெரிய பட்டியல் போட்ட கமிஷ்னர், எண்கெளன்டர் பயத்தில் வந்து சரணடைந்துவிட்டு பொய் கேஸ் போட்டதாக பொய் வேறு பேசுகிறாயா என்றார்.
அய்யா நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறன். என்னை விட்டுங்க என்று கண்ணீவிட்ட செல்வத்தை கஸ்டடியில் எடுக்க உத்தரவிட்டார் கமிஷ்னர்.
அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளே தள்ள உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications