பிற்படுத்தப்பட்டோருக்கான 27 இட ஒதுக்கீடு:தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி:மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த சட்டத்தை அமல்படுத்த கடந்த மார்ச் 29ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், அரிஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியது.
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கின் பிரதான மனு மீதான விசாரணை நடத்தி முடிக்கப்படும் வரை இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்றும் கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
விரைவில் பிரதான மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பெஞ்ச் அறிவித்தது.
முன்னதாக இந்த மனு மீதான நேற்று நடந்த விசாரணையின்போபாது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாகனாவதி வாதிடுகையில்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விரும்பினால் அதே போல செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றார்.
ஆனால் மத்திய அரசின் இந்த கோரிக்கையை மனுதாரர்கள் தரப்பு எதிர்த்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த முறையான ஆய்வு இல்லாமல், வகைப்பாடு இல்லாமல் மத்திய அரசு அவசர அவசரமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே இதை அனுமதிக்கவே கூடாது என்று அவர்கள் தரப்பு வக்கீல் வாதாடினார்.
இதையடுத்து பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் அரிசித் பச்சாயத், சி.கே.தாக்கர், ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர், இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று கோரும் மத்திய அரசு அது தொடர்பாக என்ன புதிய காரணத்தை வைத்துள்ளது? இப்போது என்ன சூழல் மாறியுள்ளது?, எந்த புதிய அம்சத்தை வைத்து வாதிடுகிறீர்கள்? என்று சரமாரியாக கேட்டனர்.
அதற்கு மத்திய அரசு வக்கீல், சமீபத்தில் தமிழத்தில் அமல்படுத்தப்படும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டினர்.
அதில், 65 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தலாம். அதேசமயம், பொதுப் பிரிவில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்ததை மத்திய அரசு வக்கீல் சுட்டிக் காட்டினார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அது அசாதாரணமான வழக்கு. அந்த வழக்கில் 14 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அது நீட்டிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் மத்திய அரசு தற்போது வைத்துள்ள அனைத்து வாதங்களும் ஏற்கனவே கூறப்பட்டவைதான், அதில் புதிதாக ஒன்றும் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications