தந்தையை குண்டு வீசிக் கொன்ற மகன்!
மதுரை:மதுரை அருகே தந்தையை வெடிகுண்டு வீசி கொன்றார் மகன்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது மாவிலிப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்நதவர் மொக்கை என்கிற மொக்கைராஜ் தேவர்(56). இவரது மகன் சின்னனன் (28). உடல் ஊனமுற்றவர். வீட்டிலேயே பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
மொக்கைராஜுக்கு ஏராளமான நிலம், சொத்து, வீடுகள் உள்ளன. இவற்றைப் பங்கு பிரிப்பது தொடர்பாக சின்னனுக்கும், மொக்கைராஜுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபத்தில் தன்னிடம் இருந்த பாறையை உடைக்க பயன்படும்நாட்டு வெடிகுண்டை எடுத்து தனது தந்தை மீது வீசினார் சின்னன். அந்த குண்டு வெடித்து மொக்கைராஜ் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். வெடிகுண்டு வீச்சால் அந்தப் பகுதியே அதிரந்தது.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடி வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மொக்கைராஜுவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மொக்கைராஜ் உயிரிழந்தார்.
தப்பிவிட்ட சின்னனை போலீஸார் தேடி கைது செய்தனர். அவரது வீட்டிருந்து 3 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சின்னானின் செயலுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது சின்னான் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் மொக்கைராஜ் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்துள்ளார்.
இந்த ஆத்திரத்தில்தான் தந்தையை குண்டு வீசி சின்னான் கொன்று விட்டதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications