மணல் கடத்தல்- திமுகவினர் அட்டூழியம்:!
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏராளமான ஆற்றுப் படுகைகளிலிருந்து எந்த அனுமதியும் இல்லாமல் மணல் கடத்தல் வெகு ஜோராய் நடைபெற்று வருகிறது.
தாமிரபரணி உள்ளிட்ட பல நதிகளிலிருந்தும் தினமும் ஆயிரக்கனக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு மணல் கடத்தல் நடந்து வருகிறது.
இந்த கடத்தலை தடுக்க அரசு உத்தரவிட்டது. இதுவரை இந்த கடத்தலை தடுக்கும் பணியில் வருவாய் துறையினர் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். இப்போது காவல் துறையும் இந்த வேலையில் இறங்கியுள்ளது.
இதால் காவல்துறைக்கும்-கரை வேட்டிகளுக்கும் இடையே அக்கப் போர் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் வாசுதேவநல்லூர் குலசேகரிகுளம் பகுதியில் திமுகவினர் ஒரு லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
அப்போது போலீசார் அங்கு சென்று லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு வருமாறு கூறிள்ளனர்.
இந்த லாரி யாருடையது தெரியுமா, திமுக ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியனுக்கு சொந்தமானது என்று கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை தாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே போலீஸார் பெரும் எண்ணிக்கையில் அங்கு வந்து திமுகவினர் 6 பேரையும் கைது செய்தனர்.
லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஓன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன் உள்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். இச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மணல் கொள்ளையில் அதிமுகவினர் மட்டுமல்ல திமுகவினரும் ஈடுபட்டுள்ளனர் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications