மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்
ஜோத்பூர்:தொடர்ந்து படிக்க விரும்புவதாக கூறிய மகளை, கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் கொடூரத் தாய்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம், உதய்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் தபு தேவி. இவரது மகள் பூசா (12). 5ம் வகுப்பு படித்து வந்த பூசா சமீபத்தில் இறுதித் தேர்வில் பாஸ் செய்தார். தொடர்ந்து படிக்கவும் விரும்பினார்.
இதை தனது தாயிடம் சொன்னார். ஆனால் படித்தது போதும், என்னுடன் வீட்டிலேயே இருந்து கூட மாட ஒத்தாசையாக இரு, வயல் வேலைகளில் எனக்கு உதவு என்று கூறியுள்ளார்.
ஆனால் நான் கண்டிப்பாக படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளார் பூசா. கடந்த 5ம் தேதியும் தனது தாயிடம் நான் தொடர்ந்து படிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார் பூசா.
இதனால் ஆத்திரமடைந்த தபு தேவி, ஆத்திரத்தில் அறிவிழந்து பெற்ற குழந்தை என்று கூட பாராமல், கழுத்தை நெரித்து பூசாவைக் கொன்று விட்டார்.
பிறகு தான் தப்பிப்பதற்காக பூசா தற்கொலை செய்து கொண்டது போல காட்டி, அவரது வீட்டின் உத்தரத்தில், தூக்கில் தொங்க விட்டுள்ளார்.
போலீஸாரும் முதலில் தற்கொலை வழக்காகவே இதை பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் தபுதேவிதான் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது தபு தேவியை போலீஸார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications