போலி மது விற்ற அதிமுக பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:போலி மது தயார் செய்து விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னத் தேவர். அதிமுக பிரமுகரான இவர் அய்யலூரில் வசித்து வருகிறார். இவர் போலி மது பாட்டில்கள் தயாரித்து மதுரை, தேனி, கம்பம், போன்ற பல ஊர்களில் விற்று வந்துள்ளார்.
இந் நிலையில் அவரைப் பிடித்த மது விலக்குப் பிரிவு போலீசார் அவரிடமிருந்து 600 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 18,000.
சின்னதேவரை கைது செய்ய மது விலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயஸ்ரீ உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications