மனைவியை மாற்றி நூதன விபச்சாரம்:பெண்ணுடன் என்ஜீனியர் கைது
சென்னை:சென்னையில் மனைவியை மாற்றி நூதன விபச்சாரத்தில் ஈடுபட்ட என்ஜீனியரை போலீஸார் வலை விரித்துப் பிடித்தனர். அவருடைய மனைவியாக நடித்த பெண்ணும் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற முத்துக்குமரன். டிப்ளமோ என்ஜீனியரான இவர் இன்டர்நெட்டில் சாட் ரூம்களில் வந்து ஒரு தகவலைக் கொடுப்பார்.
அதில், மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவிக்க விரும்புவோர் தன்னை அணுகலாம் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து ராஜேஷை பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட்டனர்.
வாடிக்கையாளர் போல ஒருவரை ராஜேஷுடன் சாட் செய்ய வைத்தனர். அப்போது தனது மனைவியை உல்லாசத்துக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் பதிலுக்கு உங்கள் மனைவியை அனுப்புங்கள் என்றும் ராஜேஷ் கூறினார்.
பதிலுக்கு ராஜேஷ் உங்களது மனைவியின் போட்டோ, வயது உள்ளிட்ட விவரங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். அதற்கு போலீஸார் செட்-அப் செய்த நபர், உங்களது மனைவியின் விவரங்களை முதலில் அனுப்புங்கள் என்றார்.
இதையடுத்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராஜேஷ் அனுப்பி வைத்தார். அதன் பின்னர் ராஜேஷை தொடர்பு கொண்ட போலீஸ் நபர், போட்டோ அனுப்ப இயலாது என்று கூறி, கோயம்பேட்டில் உள்ள ஹோட்டல் பெயரைக் குறிப்பிட்டு அங்கு வந்து விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
அதன்படி அந்த ஹோட்டலில் மாறு வேடத்தில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸாரின் நபரும், ஒரு பெண்ணுடன் அங்கு நிறுத்தப்பட்டார்.
அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் வந்தார் ராஜேஷ். இரு ஜோடிகளும் சந்தித்துக் கொண்டன. பிறகு போலீஸ் நபரிடம் ரூ. 3,000 கட்டணத் தொகையாக பெற்றுக் கொண்டார் ராஜேஷ். அதன் பின்னர் இருவரும் ஜோடிகளை மாற்றிக் கொண்டனர்.
அப்போது பதுங்கியிருந்த போலீஸார் ராஜேஷையும், அவருடன் வந்த பெண்ணையும் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் ராஜேஷ் ஒரு டிப்ளமோ என்ஜீனியர் என்று தெரிய வந்தது. அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. மனைவி கர்ப்பமாக உள்ளார். தாய் வீடு சென்றுள்ளார்.
ராஜேஷுக்கு செக்ஸ் மோகம் அதிகம். இதனால் நடிகைகளின் ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் பார்த்து ரசிப்பாராம். ஒரு கட்டத்தில் கல்யாணமான பெண்களை ருசிக்கும் விநோத ஆசை வந்துள்ளது. இதையடுத்து இன்டர்நெட்டில் புகுந்து மனைவிகளை மாற்றும் வேலையில் இறங்கினார்.
அவருடன் மனைவியாக நடித்தவர் சுதா என்ற 20 வயதுப் பெண். இவர் திருச்சியைச் சேர்ந்தவர். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த சுதாவை, ஒரு புரோக்கர்தான், ராஜேஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்து மனைவியாக நடிக்குமாறு கூறி அனுப்பியுள்ளார்.
ராஜேஷைக் கைது செய்த போலீஸார், சுதாவை அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications