நியூயார்க்கில் அணுக் கதிர்வீச்சு குண்டு பீதி!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:நியூயார்க் நகர் மீது அணுக் கதிர்வீச்சு கசியும் குண்டு வெடிக்கலாம் என்ற தகவல் வந்ததையடுத்து நகர் முழுவதும் மிகத் தீவிரமான பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் மிக உயரமான கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங், மாடிசன் ஸ்கொயர் ஆகியவை அமைந்துள்ள மன்ஹாட்டனின் 34வது தெருவில் இந்த குண்டு வெடிக்கலாம் என்ற உளவுப் பிரிவின் தகவலையடுத்து அணுக் கதிர்வீச்சைக் கண்டறியும் கருவிகளுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் பாலங்கள், சுரங்கப் பாதைகளில் கண்காணிப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது. மேலும் கதிர்வீச்சை கண்டறியும் கருவிகள் பொறுத்தப்பட்ட வாகனங்கள், படகுகள், ஹெலிகாப்டர்களும் அதிக அளவில் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன.

இன்டர்நெட் மூலமாக இந்த தாக்குதல் குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+