தேனி அருகே ஜாதிக் கலவரம்-கடைகள் எரிப்பு
தேனி:தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜாதிக் கலவரம் மூண்டது. இதில் ஒரு பிரிவினருக்குச் சொந்தமான 15 கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கும், தலித் சமுதாயத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அந்தப் பிரிவினரில் 3 கோஷ்டிகள் உள்ளனராம்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் குறிப்பிட்ட பிரிவினருக்குச் சொந்தமான 15 கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் பொம்மிநாயக்கன்பட்டியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. தகவல் அறிந்ததும் இன்று காலை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுதாகர் அங்கு விரைந்தார்.
ஆயுதப் போலீஸாரும் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீவைப்பு சம்பவம் தொடர்பாக சிலரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications