ஸ்தம்பித்த தூத்துக்குடி துறைமுகம்:தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்
தூத்துக்குடி:தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சரக்குரகளை கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து 57,000 டன் நிலக்கரியுடன் மாபெரும் சரக்கு கப்பல் நேற்று தூத்துக்குடி வந்தது. ஆனால், துறைமுகத்துக்குள் 40,000 டன் கொள்ளவு கொண்ட கப்பல்கள் மட்டுமே நுழைய முடியும்.
இதனால் அந்தக் கப்பல் துறைமுகத்தின் வெளியே நிறுத்தப்பட்டு, அதிலிருந்த சிறிய கப்பல் மூலமாக நிலக்கரி பகுதி பகுதியாகக் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒப்பந்தத் ெதாழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த துறைமுக சரக்கு கையாளும் பிரிவின் தொழிலாளர்கள், திடீரென வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
இரண்டு மணி நேரம் நீடித்த அவர்களது போராட்டத்தால் சரக்குகளை கையாளும் பணி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து துறைமுக அதிகாரிகள் தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்தினர்.
அதில் அனைத்து சரக்குகளையும் துறைமுக தொழிலாளர்களைக் ெகாண்டே கையாளவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications