ஆடி, அமாவாசை: முன்னோர்களுக்குதிதி கொடுத்து மக்கள் வழிபாடு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் இன்று முன்னோர்களுக்குத் திதி கொடுத்து மக்கள் வழிபட்டனர்.

பித்ரு சாபம், பித்ரு கடன் இரண்டும் குடும்பத்திற்கு இருக்கக்கூடாது என்பது ஐதீகம். இறந்த முன்னோர்களுக்கு ஆண்டு தோறும் கடமைகளை செய்து, வழிபடுவதுதான் இந்த இரண்டும்.

இந்த கடமைகளை ராமேஸ்வரம் கடலில் திதி கொடுத்து பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களை வழிபட்டனர். கடலில் நீராடி, படையல் வைத்து முன்னோர்களின் ஆசியை வேண்டி வழிபட்டனர்.

இதேபோல குற்றாலத்திலும், தாமிரபரணி நதி உருவாகும் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியிலும் இன்று ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல ஆயிரக்கனக்கானோர் அதிகாலை 2 மணி முதலே கூடினர். கட்டுகடங்காத கூட்டம் இரு பகுதிகளிலும் அலைமோதியது.

பாபநாசம், குற்றாலம் போக தாமிரபரணி நதி கரையிலும் தாய், தந்தை, கணவனை இழந்தோர் கூடி முன்னோர்களை வழிபட்டு "எள்ளும் தண்ணீரும்" இறைத்து கடமைகளை செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+