தாய் வீட்டிலிருந்து வர மறுத்தமனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!
சென்னை:குடித்தனம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவி மீது அமிலம் வீசினார். இதில் அந்தப் பெண் காயமடைந்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அக்பர். கூலித் தொழிலாளியான இவருக்கு சபீனா பேகம் என்ற மனைவி உள்ளார்.
இருவருக்கும் கல்யாணமாகி 5 வருடங்கள் ஆகிறது. குடிப்பழக்கம் உடையவரான அக்பர் அடிக்கடி குடித்து விட்டு வந்து கலாட்டா செய்வது வழக்கம். இதனால் ஆத்திரமடைந்த சபீனா பேகம், தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தனது மாமியார் வீட்டுக்குப் போனார் அக்பர். நான் திருந்து விட்டேன், சேர்ந்து குடும்பம் நடத்தலாம் வா என்று மனைவியைக் கூப்பிட்டுள்ளார்.
ஆனால் வர முடியாது என்று சபீனா பேகம் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்பர், தனது கையில் இருந்த கழிப்பிடத்தைக் கழுவும் அமிலத்தை எடுத்து சபீனா மீது ஊற்றினார். இதில் அவரது, முகம், கை, கால், முதுகு ஆகியவை வெந்து போனது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். போலீஸார் தப்பி ஓடிய அக்பரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications