அடுத்த வருடம் எங்க ஆட்சி: சொல்கிறார் ஓ.பி.!

Subscribe to Oneindia Tamil

காஞ்சீபுரம்: இன்னும் ஒரே ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும், திமுக ஆட்சி அகற்றப்படும் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில்,

O.Pannerselvam

முதல்வர் கருணாநிதி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா அரசுகளிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய தண்ணீருக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பை வாங்கி கொடுத்தார்.

ஆனால் அதனை செயல்படுத்த மாநில அரசுகளை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் பணிக்க வேண்டும். அவர்களும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் கேபிள் டிவியை அரசு ஏற்று நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது அதை கருணாநிதி எதிர்த்தார். ஆனால் இப்போது அவர் ஆரம்பிக்கிறார். எங்கள் தலைவியின் இவர்கள் திட்டத்தை இப்போது செயல்படுத்துகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளையை தடுத்தது ஜெயலலிதாதான். அத்திட்டம் மூலம் மணல் விற்பனையில் ரூ.168 கோடி அரசுக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் மணல் விற்பனையில் கிடைத்தது வெறும் 27 கோடி ரூபாய் மட்டுமே.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரும் ஒரே தலைவி ஜெயலலிதாதான்.

ஆனால், திமுக அரசு எதிர்கால சந்ததியினரை பாதிக்குமாறு திட்டங்களை கொண்டு வருகிறது. திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு அதுகுறித்து ஆய்வு செய்யாமல் வீணாக மக்கள் பணத்தை வீணடித்து வருகின்றனர்.

அடுத்த ஒரு ஆண்டில் மத்தியில் தேர்தல் வரும். தமிழக சட்டசபைக்கும் இடைத் தேர்தல் வரும். அப்போது திமுக அரசு அகற்றப்பட்டு, ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியில் அமரும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+