ராணுவ கிட்டங்கியில் வெடிவிபத்து2 வீரர்கள் பலி - 41 பேர் காயம்
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய ராணுவ வெடிபொருள் கிட்டங்கியில் தற்செயலாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அந்த கிட்டங்கி முழுமையாக எரிந்து சாம்பலானது. இதில் 2 வீரர்கள் பலியானார்கள். 23 ராணுவத்தினர் உள்பட 41 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய ராணுவ கிட்டங்கி அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு நேற்று பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கிட்டங்கி முழுமையாக எரிந்து சாம்பலானது. 2 ராணுவ வீரர்கள் இந்த விபத்தில் சிக்கி பலியாயினர். 23 ராணுவ வீரர்கள் உள்பட 41 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் பதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 ராணுவத்தினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது ஒரு எதிர்பாராத விபத்துதான் என்றும், தீவிரவாதிகளின் சதி வேலை அல்ல என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீபத்தில் தீயணைப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் பொதுமக்களில் 18 பேரும் காயமடைந்தனர்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகே வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications