ராமர் பாலத்தைக் காக்க வி.எச்.பி உண்ணாவிரதம்
சென்னை:ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று விஸ்வ இந்து பரிஷத் கோரி வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை அந்த அமைப்பு நடத்தியது.
சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சர்வதேச செயல் தலைவர் வேதாந்தம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ஏற்கனவே 20 சதவீத ராமர் பாலத்தை இடித்து விட்டனர். இதை தேசிய பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தும் கூட அதை கப்பல் துறை அமைச்சகம் கண்டுகொள்ளவில்லை.
வருகிற 26ம் தேதி ராமேஸ்வரம் நோக்கி ஊர்வலம் செல்லும் போராட்டம் நடத்தப்படும். ராமர் பாலத்தைக் காக்க எந்தவித தியாகத்திற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.
ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதல்ல என்று நாசா கூறுவதாக சேது சமுத்திரக் கழக தலைவர் ரகுபதி கூறுவது உண்மையல்ல என்று கூறினார் வேதாந்தம்.












Click it and Unblock the Notifications