கருணாநிதி கார் முன் கத்தியுடன் குறுக்கிட்ட திமுகவினர்!
மதுரை:மதுரையில் நேற்று நடந்த அகல ரயில் பாதை திறப்பு விழா நிகழ்ச்சியில், பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தபோது கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் குறுக்கிட்ட திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமேஸ்வரம் - மானாமதுரை அகல ரயில் பாதை திறப்பு விழா நேற்று மாலை மதுரையில் நடந்தது. இந்த விழாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி விமான நிலையத்திலிருந்து அரசு விருந்தினர் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது அவரது கார் சென்று கொண்டு இருந்த பாதையில், திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கிட்டது. அதில் இருவர் இருந்தனர். அவர்களை மடக்கி போலீஸார் சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரனையில் அவர்களில் ஒருவர் 22 வது வார்டு திமுக செயலாளர் செல்லமுத்து என்றும், மற்றொறு நபர் அவரது நண்பர் பிரகாஷ் என்றும் தெரிய வந்தது.
இருவரும் திமுகவினர் என்பதால் அவர்களை விட்டு விடுமாறு அங்கிருந்த திமுகவினர் போலீஸாரை வற்புறுத்தினர். இதையடுத்து போலீஸார் இருவரையும் விட்டு விட்டனர்.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது, ரயில் நிலையத்தில் கத்தியுடன் ஒரு நபர் வந்தார். ஆனால் யாரிடமும் பிடிபடாமல் அவர் ஓடி விட்டார். பின்னர் விசாரித்தபோது அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications