பிரகாஷ் காரத்தை சந்தித்தார் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பிரதமருக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத்தை பிரதமர் மன்மோகன் சந்தித்துப் பேசினார்.
![]() |
ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அலுவலக இல்லத்தில் காலை சிற்றுண்டியின்போது இச் சந்திப்பு நடந்தது. அப்போது வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜியும் உடனிருந்தார்.
அப்போது இருவரும் தங்களது நிலையை தெளிவுபடுத்தியதாகத் தெரிகிறது.
![]() |
அமெரிக்காவுக்கு அடிபணியும் வகையில் நடந்து கொண்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என இடதுசாரிகளும், வேண்டுமானால் அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறலாம் என பிரதமரும் சவால் விட்டுக் ெகாண்ட நிலையில் இச் சந்திப்பு நடந்துள்ளது.
இன்றைய சந்திப்பின்போது தனது நிலையில் பிடிவாதமாக இருந்த காரத், அடுத்த சில நாட்களில் கூடவுள்ள கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதித்த பின் தனது முடிவை அறிவிப்பதாக பிரதமரிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஆட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லாத வகையில் பிரச்சனைய தீர்த்துக் கொள்ளலாம் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர்.














Click it and Unblock the Notifications