புளு பிலிம் கும்பல்: ஈசிஆர் சாலையில் போலீஸ்விடிய விடிய ரெய்ட்- பிடிபட்ட ஜோடிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் விடுதிகளில் புளூபிலிம் எடுக்கும் கும்பலை போலீசார் தேடும்போது, காதல் ஜோடிகள் என்ற பெயரில் பலரும் அட்டகாசம் போட்டது அதிரடி சோதனையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் திருவான்மியூரிலிருந்து, மகாபலிபுரம் வரை ரிசார்ட்ஸ், காட்டேஜ், பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு பங்களாக்கள் ஆகியவை நிறையவே உள்ளன. இங்கு பல தொழிலதிபர்கள், கல்லூரி மாணவர்கள், பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், நடிகர்-நடிகைகள் என பல தரப்பினரும் பெண்களுடன் கும்மாளம் போட்டு வருகின்றனர்.

இப் பகுதியில் உள்ள பண்ணை வீடுகள் மற்றும் ரிசார்ட்ஸ்களில் நடிகைகள், துணை நடிகைகளை வைத்து புளு பிலிம்களும் எடுக்கப்பட்டு வருவதாக பரவலாக புகார்கள் உள்ளன.

இந் நிலையில் அடையாறு துணை போலீஸ் கமிஷ்னர் சேஷாயி தலைமையில் சிறப்புப் படை போலீசார் கேளம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் பண்ணை வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பல ஜோடிகள் சிக்கினர். இதில் கள்ளக் காதல் ஜோடிகள் மிக அதிகம். பெரும்பாலான ஆண்கள் போலீசாரைக் கண்டவுடன் அழைத்து வந்த பெண்ணை விட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

இதையடுத்து போலீசாரும் அந்த பெண்களை எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர்.

இன்னொரு ரிசார்ட்ஸில் நள்ளிரவு வரை குடிபோதையில் தொழிலதிபர்கள் சிலர் ஜோடிகளுடன் ஆட்டம் போட்டபடி பிடிபட்டனர். போலீசார் அவர்களை விசாரித்தபோது, இது எங்கள் பிசினஸ் சம்பந்தப்பட்ட பார்ட்டி, ஏன் ஜாலியாக இருக்கக் கூடாதா என்று போலீசாரையே மிரட்டியுள்ளனர்.

இரவு 12 மணிக்கு மேல் பார்ட்டி நடத்த கூடாது என்று தெரியாதா என எச்சரித்து அவர்களையும் கலைந்து செல்ல போலீசார் உத்தரவிட்டனர்.

இந்த மாதிரியான செயல்களுக்கு இனிமேல் அனுமதி கொடுத்தால் நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும் என்று பண்ணை வீடுகளின் நிர்வாகிகளையும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்று மட்டும் 30க்கும் மேற்பட்ட விடுதிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை. இன்று அதிகாலை 6 மணி வரை சோதனை நடத்தியும் புளுபிலிம் கும்பல் ஏதும் பிடிபடவில்லை.

போலீஸ் வருவதை தெரிந்தவுடன் அவர்கள் தப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.

முதல்கட்டமாக எச்சரிக்கையுடன் விட்டுள்ளோம், இனிமேல் அதிரடியான நடவடிக்கைகள் இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+