அரசியல் பழிதீர்க்க வழக்கு- வைகோ ஆவேசம்
சென்னை:அரசியல் வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வதற்காக என் மீது வழக்கு போடுகிறார்கள் என ள்ளார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக எம்பிக்களான செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் மதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றதற்கு முதல்வர் கருணாநிதி தான் காரணம் என வைகோ குற்றம் சாட்டியிருந்தார்.
வைகோவின் இந்தப் பேச்சு கருணாநிதிக்கு பெரும் இழிவை உண்டாக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வைகோ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அரசியலில் என்னை பழிவாங்குவதற்காக என்மீது ஆளும்கட்சி போட்ட இந்த வழக்கில், நீதி வென்று உண்மை கண்டிப்பாக ஜெயிக்கும். நான் நம்பிக்கையோடு சட்டப்படி வழக்கை சந்திப்பேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி இணைப்பை தேசியமயமாக்க ஜெயலலிதா முயற்சிகள் எடுத்தார். ஆனால் அப்போது அந்த மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறியவர், இன்று அதே சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
இலங்கை ராணுவம், அப்பாவி தமிழர்கள் மீது நடத்திவரும் கொடூர தாக்குதலுக்கு இந்திய அரசு, அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்ந்து ஆயுதங்கள் சப்ளை செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளும் உடந்தையாக இருக்கின்றன.
மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இதுவரை ஓராயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் எல்லாம் விடுதலைப் புலிகள் ஈடுபட மாட்டார்கள்.
ஆனால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை எதிர்த்து இந்திய கடற்படை தாக்குதல் நடத்தியதே கிடையாது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications