திருச்சி: காவிரி புதை மணலில் சிக்கி 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:திருச்சி கல்லணைப் பகுதியில் காவிரியில் குளித்த நான்கு பேர் புதை மணலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி நேற்று விடுமுறை என்பதால் திருச்சி காவிரிக் கரையோரங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக கல்லணை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுதந்திர தின விடுமுறையைக் கொண்டாடினர்.

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் 8 பேரும் இதுபோல கல்லணைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அப்போது வண்ணான்படித்துறை கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர்.

அதில் 5 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அனைவரும் புதைமணலில் சிக்கிக் கொண்டனர்.

இவர்களில் இரண்டு பேர் கஷ்டப்பட்டு மணலில் இருந்து விடுபட்டு கரைக்கு வந்து விட்டனர். மதுரையைச் சேர்ந்த அருண் பிரசாத், பழனிபாபு, கோவையைச் சேர்ந்த திலீப் குமார் ஆகிய 3 பேரும் நேற்று இரவு வரை திரும்பவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதேபோல, திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த அஸ்கர் ஷெரீப் என்ற வாலிபரும் கல்லணைப் பகுதியில் புதை மணலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+