நெல்லை, தூத்துக்குடி, குமரியில் 17சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அதிரடி ரெய்டு
திருநெல்வேலி:நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 17 சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் அதிகாரிகள் குழு அதிரடி சோதனை நடத்தியது.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக புகார்கள் வந்தது. இதையடுத்து அனைத்து என்ஜினியரிங் கல்லூரிகளையும் ஆய்வு செய்ய அரசு அதிரடி முடிவு எடுத்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரெய்டு நடந்து வருகிறது. இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 17 என்ஜினியரிங் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு என்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் அண்ணாதுரை தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 7 குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று மாணவர்களிடம் கேட்கும் இந்த குழுவினர் கட்டணம் கட்டியதற்கான ரசீதையும் ஆய்வு செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications