இராக்கில் பயங்கர தற்கொலைப்படைதாக்குதல்-500 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இராக்:இராக்கில் இரு கிராமங்களில் நடந்த 4 பயங்கரமான தற்கொலைப் படை தாக்குதல்களில் 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.

சிரியா எல்லையில் உள்ள குர்திஷ் இனத்தின் யஷிதிஸ் பிரிவினர் வசிக்கும் இந்த கிராமங்களில் செவ்வாய்கிழமை இரவு இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. இதில் 350க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்கப் படைகளுக்கு குர்திஷ் இனத்தினர் துணை போவதாகக் கூறி அல்-கொய்தா தான் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

4 லாரிகளில் குண்டுகளை நிரப்பியபடி வந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புகளில் கிராமங்களில் பெரும்பாலான கட்டங்கள் இடிந்துவிட்டன. இதனால் குடும்பம் குடும்பமாக 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததில் இருந்து நடந்துள்ள மிகப் பெரிய தாக்குதல் இது தான். இராக்கில் வன்முறைகள் குறைந்து வருவதாக 2 வாரங்களுக்கு முன் அதிபர் புஷ் பேட்டியளித்த நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.

இராக்கில் யஷிதிஸ் பிரிவினரின் எண்ணிக்கை மிகக் மிகக் குறைவாகும். இந்தத் தாக்குதல் மூலம் அந்த இனத்தையே அழிக்க முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன. தேவதை வழிபாடு நடத்தி வரும் இவர்கள் இஸ்லாமிய நாட்டையே கேவலப்படுத்திவிட்டதாக சில வாரங்களுக்கு முன் அல்-கொய்தா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.

அமைச்சரை கடத்திய தீவிரவாதிகள்:

இதற்கிடையே பாக்தாத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் போன்று உடையணிந்த தீவிரவாதிகள், இராக்கின் எண்ணெய் வளத்துறை அமைச்சரை அவருடைய வீட்டில் துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+