பெரு நாட்டில் மிக பயங்கர நிலநடுக்கம்: 340 பேர் பலி
பெரு:தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 340 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சுனாமி தாக்குதல் ஏற்படவில்லை.
![]() |
இந்த நிலநடுக்கம் நேற்று மாலை 6.40க்கு (இந்திய நேரப்படி இரவு 11.40க்கு) நிகழ்ந்துள்ளது. கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.
இதில் 340 பேர் வரை பலியாகியுள்ளனர். 1350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
![]() |
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது.
கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
![]() |
இந்த நிலநடுக்கத்தால் லிமா நகரில் உள்ள டிவி, செல்போன் சேவைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு அனைத்தும் ஸ்தம்பித்துவிட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விட்டதால் இரவு நேரத்தில் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. லிமா நகரில் எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்களாகத் தான் தெரிகின்றது. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் மருத்துவமனைகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications