இந்திய அரசியலுக்கு நான் பலிகடா-குவத்ரோச்சி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

போனஸயர்ஸ்:இந்தியாவில் உள்ள அரசியல் பிரச்சனைக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன் என்று போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடர்புடைய இத்தாலிய தொழிலதிபர் குவத்ரோச்சி கூறியுள்ளார்.

இத்தாலி நாட்டு தொழிலதிபரான குவத்ரோச்சி அர்ஜெண்டினா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் இந்தியா கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் குவத்ரோச்சி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இந்தியா சரியாக தரவில்லை எனக்கூறி அர்ஜெண்டினா நாட்டு நீதிமன்றம் அவரை விடுவித்து, நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதித்தது.

Guattrocchi

கடந்த வாரம் இந்தியாவுக்கே தெரியாமல் குட்ரோச்சி இத்தாலி புறப்பட்டுச் சென்றுவிட்டார். கடந்த வியாழக்கிழமை அவர் கிளம்பிப் போனது திங்கள்கிழமை தான் அர்ஜென்டினாவுக்கான இந்தியத் தூதருக்கே தெரியுமாம்.

அவரை தப்பவிட்டுவிட்ட நிலையில் அவர் எங்கு போனாலும் விட மாட்டோம் என சிபிஐ இப்போது சவுண்டு விட்டுக் கொண்டுள்ளது.

இந் நிலையில் குவத்ரோச்சி அளித்துள்ள பேட்டியில்,

நான் இந்திய நாட்டின் நண்பனாக இருந்தேன். ஆனால் இந்தியாவில் அரசியல் பிரச்சனையால் என்னை இந்த வழக்கில் மாட்ட வைத்து விட்டனர். என் து அபாண்டமாக சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் நான் நிரபராதி என்பதை நிரூபித்துள்ளேன்.

போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் சிபிஐ சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறி நேர்மையின்றி நடந்து கொண்டுள்ளது.

தேவைப்பட்டால் சிபிஐ மீது நான் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பேன்.

சிபிஐயில் உள்ள சிலர் என்னை பழி வாங்க நினைக்கின்றனர். அவர்களது குறி நான் அல்ல. என் மூலமாக இந்தியாவில் உள்ள என் நண்பர்களை (சோனியா குடும்பம்) வளைக்க முயல்கிறார்கள் என்றார்.

வழக்கு செலவை சிபிஐ கொடுக்க உத்தரவு:

இந் நிலையில் இன்னொரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை சிபிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா நாட்டு சட்டப்படி ஒருவர் மீது வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கின் மீது சரியான ஆதாரம் இருக்கவேண்டும். இல்லையெனில் வழக்குக்கான செலவை, வழக்கு தொடர்ந்தவர்தான் கொடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சிபிஐ, குவத்ரோச்சி வழக்கிற்கான மொத்த செலவையும் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்றார் அந்த சிபிஐ அதிகாரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+