அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரியாக பிரிஜேஸ்வர் சிங் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசு தொடங்கவுள்ள கேபிள் டிவி கார்பரேசனின் தலைவராக, ஒளிபரப்புத் துறையில் அனுபவம் பெற்றவரான பிரிஜேஸ்வர் சிங்கை அரசு நியமித்துள்ளது.

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பை இவர் வகிப்பார். பஞ்சாபைச் சேர்ந்தவரான பிரிஜேஸ்வர் சிங் தமிழக கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார்.

சில வருடங்களாக மத்திய அரசுப் பணியில் இருந்த இவர் ஆல் இண்டியா ரேடியோவின் துணை இயக்குனராகவும், பிரசார் பாரதி நிறுவனத்தின் மதலைமை செயல் இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

இவர் இரு தினங்களுக்கு முன்பு தான் திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியுடன் சேர்த்து அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பையும் அவர் கவனிப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+