பாகனை மிதித்துக் கொன்ற யானை

Subscribe to Oneindia Tamil

கேரளா:

கேரள மாநிலம் திருச்சூரில் குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான யானை பாகனை கடுமையாக தாக்கி மிதித்துக் கொன்றது. பாகனின் உதவியாளர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

குருவாயூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நான்கு யானைகள் மற்றொரு கோவில் திருவிழாவுக்கு அழைத்து செல்லப்பட்டது. திருவிழா முடிந்ததும், 4 யானைகளும் மீண்டும் குருவாயூர் கோவிலுக்கு திரும்பியது.

அப்போது திடீரென ஒரு யானை, பாகனின் உதவியாளரை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். யானை தாக்கியதைப் பார்த்த பாகன், உடனடியாக அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தார். ஆனால் படு கோபத்துடன் ஓடத் தொடங்கிய யானை, பாகனை கீழே தள்ளி மிதித்தது. இதில் அவர் இறந்தார். பின்னர் காட்டுக்குள் ஓடத் தெடாங்கியது.

யானையின் வேக ஓட்டத்தால் எதிரே சிக்கிய மரங்கள், படகுகள் ஆகியவை சேதமடைந்தன. நீண்ட நேர துவம்சத்திற்குப் பிறகே யானை சாந்தமடைந்தது.

கேரளாவில் யானைகள் இப்படி மதம் பிடித்து பாகன்களைத் தாக்குவதும், பாகன்கள் இறப்பதும் அதிகரித்து விட்டது. கடந்த ஆண்டு மட்டும் 40 பாகன்கள் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+