வைகோ உண்ணாவிரதம் நெல்லைக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தென்காசியில் வருகிற26ம் தேதி தென்காசியில் எனது தலைமையில், உண்ணாவிரதம் நடத்தப்படும் என அறிவித்திருந்தேன்.

மதிமுகவினரின் போராட்டத்தில் அமைதியும், கட்டுப்பாடும் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். என்றபோதிலும், பதட்டம் இன்னும் முழுமையாகத் தணியாததால், தென்காசிக்குப் பதில் நெல்லையில் உண்ணாவிரதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தாத தமிழக அரசைக் கண்டித்து வருகிற 20ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்த போராட்டம் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+