பொதுச் சந்தையில் ஆசிட் விற்கத் தடை:மகளிர் ஆணையம் வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பொதுச் சந்தையில் ஆசிட் விற்கத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நலன் மனுவில்,
சமீப காலமாக நாடு முழுவதும் பெண்கள் அதிகளவில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த வாரம் டெல்லியில் பிரபல ஃபேஷன் டிசைனர் தர்வீன் கெளர் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்தார்.
இதை தடுப்பதற்கு ஒரே வழி, பொதுச் சந்தையில் ஆசிட் விற்பனையைத் தடை செய்வதுதான். எனவே ஆசிட்டை அபாயகரமான ஆயுதமாக அறிவித்து, பொதுச் சந்தையில் ஆசிட் விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.
மேலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களுக்கு இழப்புத் தொகை வழங்க, இதை இன்சூரன்சில் சேர்க்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications