ஜனாதிபதியை சந்திக்க ரூ.22,000: எஸ்.எம்.எஸ் அனுப்பியவர் கைது
மும்பை:இந்தியாவின் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்ள ரூ.22,000 செலவாகும் என எஸ்எம்எஸ் அனுப்பியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன்களில் பலருக்கும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில், என் பெயர் பைடே, மரான்ஸ் ஏசியன் சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற அமைப்பின் அமைப்பாளர்.
எனக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நன்றாக தெரியும். நீங்களும் அவரோடு பேசவேண்டும், போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இந்த சந்திப்புக்கு ரூ.22,000 கட்டணம் தந்தால் போதும் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து தொலைக்காட்சிகளில் செய்தி வந்த பிறகே போலீசாரின் கவனத்துக்கு வந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பைடேவை கைது செய்தனர். விசாரணையில், பைடே என்பவர் எந்த அமைப்பிலும் அமைப்பாளராக இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது.












Click it and Unblock the Notifications