விமானத்தில் பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்-ராணுவ வீரர் கைது
ஸ்ரீநகர்:விமானத்தில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து ஏர்டெக்கான் நிறுவன விமானம் டெல்லிக்கு புறப்பட்டது.
அதில் பயணித்த கிருஷ்ண குமார் என்ற பாதுகாப்புப் படை வீரர் பெண் பயணி ஒருவரிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்யவும் முயன்றார். குமாரின் இந்த செயலால் பெண் பயணி அலறி சத்தம் போட்டார்.
கிருஷ்ண குமாரின் செயலைப் பார்த்து அதிர்ந்த மற்ற பயணிகளும் அவர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் அவரை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.
இதே விமானத்தில் காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத்தும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செக்ஸ் சில்மிஷம் செய்த கிருஷ்ணன்குமார் தேசிய பாதுகாப்பு படையில் பணியாற்றிய கமாண்டோ ஆவார்.












Click it and Unblock the Notifications